திமிரு, ஜெயிலர், மதுரை சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விநாயகன். இவர் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ரகளையில் ஈடுபட்டதாக விநாயகனை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹோட்டல் நிர்வாகிகளுடனும், காவல்துறை அதிகாரிகளுடனும் விநாயகன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.