இமாச்சலப் பிரதேசம்: மண்டி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி கமெண்ட் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் ஒரு டெம்போ விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த 4 பேர் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.