திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்களில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக பேருந்தை தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் பிரவீன்ராஜ் மற்றும் சுந்தரராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.