திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசிய பேச்சை நீங்கள் அறிவீர்கள். தான் அமைச்சர் என்பதை மறந்து அவர் பேசிய பேச்சை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம். மதவாத பிளவை நோக்கம் கொண்ட சூளுரை அது. மாற்றுக்கட்சி அரசாங்கம் நடக்கும் மாநிலங்களில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன் வைக்கிறார்" என கூறினார்.