திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வாகன தணிக்கையில் நிற்காமல் பேரிகார்டில் மோதிவிட்டு கார் ஒன்று சென்றது. இதையடுத்து காரை சினிமா பாணியில் துரத்திச் சென்று காவலர் ஒருவர் பிடித்தார். 25 கி.மீ அளவில் ஒற்றை ஆளாக பைக்கில் துரத்தி துணிச்சலாக அவர் பிடித்தார். இதையடுத்து காரில் இருந்த போதை ஆசாமி பார்த்திபனை செய்யாறு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.