மத்தியபிரதேசம்: போபாலில் டிராபிக் சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்த பஸ் வாகனங்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண் மருத்துவர் ஆயிஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஆயிஷாவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடுகின்றனர்.