‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்

71பார்த்தது
‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியில் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி