சென்னை: துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு, உள்நோக்கம் கொண்டது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “திருநெல்வேலி பாஜக நிர்வாகியாக இருந்தவர் தொடர்ந்த வழகில், விடுமுறை காலத்தில் மனுத்தாக்கல் செய்தது ஏன்?. அவசரமாக மனு தாக்கல் செய்தது ஏன்? என்பதை தெரிவிக்கவில்லை. துணைவேந்தர் நியமனத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.