ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், "கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டனாக்கியது நியாயம் இல்லை, பும்ராவே அதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.