இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட என்ஜினுடன் புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெஸ்பா கிளாசிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.33 லட்சம், வெஸ்பா எஸ் ரூ. 1.36 லட்சம், வெஸ்பா டெக் ரூ. 1.92 லட்சம், வெஸ்பா எஸ் டெக் ரூ. 1.96 லட்சம் என எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இவை, அனைத்தும் 125cc மாடல்களின் விலையாகும். மேலும் 150cc ஸ்கூட்டர்களின் விலை பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.