சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் டிச.27 ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கல்லூரி மாணவி சத்யபிரியா தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் சதீஷ், 2022ஆம் ஆண்டு அக்.13ஆம் தேதி ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.