சுக்கிரன் 27 நட்சத்திரங்களில் 26வது நட்சத்திரமான உத்திர பாத்ரபதாத்தில், பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை, காலை 8:37 மணிக்கு நுழைவார். இந்த நட்சத்திரமானது அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. இந்த அதிர்ஷ்ட நட்சத்திரத்தில் நுழைவதால் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், செழிப்பு, ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால், மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளின் வாழ்க்கை செல்வ, செழிப்பாக மாற உள்ளது.