யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? என்று வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழக அரசே வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்று அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்திடுக. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தை மாண்பை இழிவுபடுத்த அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.