வேலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் அமுதாஞானசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகேஸ்வரி காசி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, அமுதவல்லி ஆகியோர் வரவேற்றனர்.
ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைவர் கூறுகையில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 18 பஞ்சாயத்துகளுக்கு 200 வீடுகள் கட்ட பணி அணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.