வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு!

67பார்த்தது
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு!
வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டிற்கு பெங்களூரு, வீ. கோட்டா, குப்பம், கடப்பா, குண்டூர், ஓசூர், சேலம், தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மார்க்கெட்டிற்கு தினமும் 10 முதல் 12 டன் வரை பூக்கள் வருகின்றன. மார்க்கெட்டில் சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்களின் போது பூக்களின் விலை அதிகமாக காணப்படும்.

தற்போது நேதாஜி பூ மார்க்கெட்டில் ஆடிமாத 3-வது வெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கிலோ ரூ. 100-க்கு விற்பனையான முல்லை ரூ. 200 அதிகரித்து ரூ. 300-க்கும், கிலோ ரூ. 500-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ. 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதனால் சிறிய பூக்கடை வியாபாரிகள், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோன்று மல்லி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி