திருவிழா தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

719பார்த்தது
திருவிழா தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
வேலூர் அடுத்த அரியூர் அருகே உள்ள சின்ன தெள்ளூர் கிராமத்தில் கெங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இரவு வேளையில் சாமி ஊர்வலம் சென்றது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35) ஊர்வலத்தில் நடனம் ஆடினார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் நடனம் ஆடினர். இதல் நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டி உள்ளனர். இதனால் அருண்குமாருக்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை பீர் பாட்டிலால் குத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி