மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 3 பேர் கைது.

76பார்த்தது
மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 3 பேர் கைது.
வேலூர் மாநகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட Sp மதிவாணனுக்கு வந்த தகவல் பேரில் தனிப்படை காவல் துறையினர் பாகாயம் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (வயது 20) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து ரஞ்சித், விக்னேஷ், சிவக்குமார், பூபாலன் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள், கார், இருசக்கர வாகனம், பணம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் இதில் தொடர்புடைய பள்ளிகொண்டா அருகே கொல்லமங்கலம் செல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த அபிஷேக் (31), வேலூர் சம்பத்நகரை சேர்ந்த விமல் (24), மூஞ்சூர்பட்டை சேர்ந்த ரவிக்குமார் (25) ஆகியோரையும் பாகாயம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட அபிஷேக் டிப்ளமோ படித்துள்ளார். அவருக்கு இன்று பெங்களூருவில் திருமணம் நடக்க இருந்தது. இந்தநிலையில் அவர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் யாரிடம் போதை மாத்திரைகள் வாங்கினர்? , எப்படி வாங்கினர்? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி