வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு காலாண்டு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மின்வாரிய வேலூர் செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: -மின்வாரிய ஊழியர்கள் பணியின் போது கட்டாயம் கை உறைகளை அணிய வேண்டும். இடுப்பு பெல்ட் இல்லாமல் வேலை செய்யக்கூடாது. மின் கம்பத்தில் ஏறும்போது டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்து விட்டு வேலை செய்ய வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எர்த் ராடுகளை பயன்படுத்த வேண்டும் என அவர் பேசினார். உதவி செயற்பொறியாளர்கள் சிட்டிபாபு ரமேஷ், தலைமை அலுவலக செயற்பொறியாளர் பாதுகாப்பு சங்கர் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் அருள்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.