வேலூரில் சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரை மூலம் போதை ஊசி தயார் செய்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் சிறார்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் முத்து மண்டபம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது இளம் சிறார்களுக்கு போதை மாத்திரைகளை ( வலி நிவாரணி) விற்பனை செய்த போது வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த கிஷோர்குமார் என்பவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை வாங்கி வந்து விற்றதும், பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
பின்னர் போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனையில் தொடர்புடைய வேலூர் ஓல்ட் டவுனை சேர்ந்த ரஞ்சித், விக்னேஷ்; கஸ்பாவை சேர்ந்த பூபாலன், வேலப்பாடியைச் சேர்ந்த சிவகுமார் ஆகியிரை கைது செய்தனர். மேலும் கைதான 5 பேரிடமிருந்து 1100 போதை மாத்திரைகள், ஒரு கார், நான்கு பைக்குகள் மற்றும் ஐந்தாயிரம் உறக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். சிறார்களை போதைக்கு அடிமையாக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எஸ்பி மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.