வாசிப்பு பழக்கம் இரண்டு நாள் குழந்தைகள் அறிவியல் விழா நிறைவு

69பார்த்தது
வாசிப்பு பழக்கம் இரண்டு நாள் குழந்தைகள் அறிவியல் விழா நிறைவு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலூர் குழந்தைகள் அறிவியல் விழாவில் பங்கேற்ற அனைவருமே வெற்றியை கொண்டாடினார்கள். காகித மடிப்பு கலையினையும் பேச்சாற்றல் திறனையும் வளர்த்துக்கொண்டனர்.
வேலூர் அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் கல்வி விழா இரண்டு நாட்கள் வேலூர் ஊரிசு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
குழந்தைகள் அறிவியல் கல்வி விழாவின் நிறைவு விழா வேலூர் அறிவியல் இயக்க தலைவர் முனைவர் கே. தேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட மாவட்ட செயலர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன், செயற்குழு நிர்வாகிகள் ஜோசப் அன்னையா, பி. ராஜேந்திரன், ச. குமரன், பி. ராமு, கே. இளவழகன், ராணிப்பேட்டை அறிவியல் இயக்க மாவட்ட செயலர் பழனிவேல் ஆகியோர் அறிவியல் விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளித்து பாராட்டுச் சான்று வழங்கி சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி