கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). லாரி டிரைவரான இவர் நேற்று இரவு திருப்பூரில் 32 பேரல்களில் ஆசிட் திரவத்தை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்தார்.
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகை பாலம்
வேலை நடைபெறும் இடத்தில் சென்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது.
சாலையில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத் திண றலால் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாலையில் கொட்டிய ஆசிட்டை அப்புறப்படுத்தினர். பின்னர் கிரேன் உதவியுடன் லாரியைமீட்டனர். மீதமிருந்த ஆசிட் பேரல்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.