வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி (67) கூலித்தொழிலாளி. நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவிக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சுப்பிரமணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.