வேலூர் மாவட்டத்தில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி வேலூர் கோட்டை எதிரில் உள்ள நகர அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் புஷ்பலதா, வன்னிய ராஜா, வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் காஞ்சனா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.