தொடர் கள்ளச்சாராய குற்றத்தில் ஈடுபட்டு வந்த அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் இணைந்து இன்று குப்புசாமி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.