வேலூர் மாவட்டம் பொய்கை வார சந்தையில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்து சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை அகற்றி தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ் பாபு உடன் இருந்தார்