மாற்றுத்திறனாளியிடம் ரூ. 14 லட்சம் மோசடி!

67பார்த்தது
மேல்பாடி பகுதியை சேர்ந்த 46 வயதுடைய மாற்றுத்திறனாளி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது நண்பர் ஒருவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். அவர் எனது பெயரில் வீடு கட்டி தருவதாக என்னிடம் கூறினார். அதற்கு முன் பணமாக ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து என்னிடம் ரூ. 12 லட்சத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் வீட்டை கட்டி எனக்கு தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவரிடமிருந்து வீடு அல்லது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி