2¾ லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: கமிஷனர் தொடங்கி வைத்தார்!

67பார்த்தது
2¾ லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: கமிஷனர் தொடங்கி வைத்தார்!
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூர் முத்தண்ணா நகர் குடியிருப்போர் நல சங்க பூங்காவில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவில் மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, மாவட்ட வனத்துறை அதிகாரி வி. குருசாமி பாலா, மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் ஆர். வெங்கடேசன், உதவி பொறியாளர்கள் சவுந்தர்யா, வி. சுஷ்மிதா, டி. ராஜேந்திர பிரசாத், ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலூர் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு, தன்னார்வலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த இயக்கம் மூலம் கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 576 மரக்கன்றுகளும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளும் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி