வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அன்பூண்டி கிராமம் பள்ளத்தெருவை சேர்ந்த விஜயன் மனைவி மாலா (வயது 47). இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலாவிற்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அதனால் மனமுடைந்த அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரின் அலறல் சத்தம்கேட்ட குடும்பத்தினர் உடனடியாக மாலாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.