வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தொலைந்து மற்றும் திருட்டு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி. ஐ. ஜி. முத்துச்சாமி கலந்துகொண்டு 2-வது கட்டமாக 40 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புடைய 210 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் இதுவரை வேலூர் மாவட்டத்தில் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.