வேலூர் ரங்காபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா மற்றும் சறுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சறுக்கு மரம் ஏறினர். ஒருவர் மீது ஒருவராக சறுக்கு மரம் ஏறும் போது அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு நின்று கண்டுகளித்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஸ்ரீ கிருஷ்ணர் திருவீதி உலா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் உற்சவத்தை தரிசனம் செய்தனர்.