தேர்தலில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்!

52பார்த்தது
தேர்தலில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்!
வேலூர் மக்களவைத் தொகுதியில் பணிபுரிய உள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ் குமார், தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கோயல் ஆகியோர் முன்னிலையிலும் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (15. 04. 2024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருகன் (அணைக்கட்டு), கவிதா (வேலூர்) திருமதி சுமதி (கீ. வ. குப்பம்), சுபலட்சுமி (குடியாத்தம்) அஜிதா பேகம் (வாணியம்பாடி), ஃபெலிக்ஸ் ராஜா (ஆம்பூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி