வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வெள்ளைக்கல் மலை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் கடந்த 7ம் தேதி வெட்டியப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குப்புசாமியின் மனைவி மல்லிகா, தனது கணவரை போலீசார் பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், கணவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், 'வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.