வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கால்வாய் கட்டும் பணி, பாதாள சாக்கடை திட்டம், சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும்படி முதலமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.