தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் முத்தரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்துகொண்டு பயனுள்ள மாணவிகளுக்கு வங்கி அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் நகராட்சி துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.