கணவனுக்கு தெரியாமல் சொத்தை விற்ற பலே கில்லாடி பெண் கைது!

82பார்த்தது
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீரபாண்டியன். இவரது மனைவி கெஜலட்சுமி. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் 11 சென்ட் நிலத்தை தனக்கு தெரியாமல் விற்பனை செய்து விட்டதாக ரகு வீரபாண்டியன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் கெஜலட்சுமி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்தி