வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்றிருந்த மரத்தின் ஒருபகுதி நேற்று இரவு திடீரென முறிந்து கீழே விழுந்தது.
அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அதில் சிக்கிக்கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அடியில் சிக்கிக்கொண்டஇரு வாகனத்தையும் மீட்டனர். சாலையில் திடீரென மரம் முறிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.