வேலூரில் 36705 பேர் குரூப் 4 தேர்வை எழுதுகின்றனர்

57பார்த்தது
வேலூர் 9-6-24

வேலூர்மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 36705 பேர் தேர்வை எழுதுகின்றனர் - மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தேர்வு மையங்களில் நேரில் ஆய்வு
_____________________________________________
வேலூர்மாவட்டம் , வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்துறையின் குரூப் 4 தேர்வு 6244 காலிப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் இன்று 20 லட்சம் பேர் தேர்வை எழுதவுள்ளனர் இதில் இம்மாவட்டத்தில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 36705 பேர் தேர்வினை எழுதுகின்றனர் வேலூர் ஈ. வெரா நாகம்மையார் பள்ளி தேர்வு மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பார்வையிட்டார் 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது வேலூர், காட்பாடி, அனைக்கட்டு, கேவிக்குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய மையங்களில் தேர்வுகள் நடக்கிறது இதில் 48 நடமாடும் கண்கானிப்பு யூனிட்டுகள் 130 முதன்மை கண்காணிப்பாளர்களும் 130 தேர்வு கூட ஆய்வு அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் அத்துடன் தேர்வில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

பேட்டி: சுப்பு லெட்சுமி (வேலூர் மாவட்ட ஆட்சியர்)
Job Suitcase

Jobs near you