வாணியம்பாடியில் தனியார் தோல் தொழிற்சாலையில் லிப்ட் பழுதாகி வேகமாக தரைத்தளத்தில் விழுந்ததால் தொழிலாளி உயிரிழப்பு
வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள கச்சேரி சாலையில் முசப் லெதர்ஸ் என்ற பெயரில் தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த கலீம் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தோல்களை முதல் மாடிக்கு எடுத்து செல்வதற்காக லிப்டில் தோல்களை ஏற்றி கொண்டு சென்ற போது லிப்ட் முதல் மாடிக்கு செல்வதற்கு முன்பே லிப்ட் பழுதாகி திடீரென மீண்டும் தரை தளத்தில் வேகமாக விழுந்தது. இதில் கலீம் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை உடனடியாக சக தொழிலாளிகள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே. இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்