வாணியம்பாடி அருகே கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!

1050பார்த்தது
சென்னை சேர்ந்த ரிஸ்வான், செரின் தம்பதியினர் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற விரைவு ரயில் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு வந்த நிலையில், ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக கணவன் கண்முன்னே, மனைவி ஷெரின் ரயிலில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதே போல ரயில்வே பாதையை கடக்க முயன்று உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருவதால் வாணியம்பாடியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் யாரும் ரயில்வே பாதையை கடக்க முடியாத வண்ணம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி