திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிக்குட்பட்ட சென்னாம்பேட்டை, கொல்லத்தெரு, நியூடவுன், அம்பூர்பேட்டை, பெருமாள்பேட்டை, ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டங்களுக்கு நகர செயலாளர் சதாசிவம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர். செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு தேர்தல் வீயூகங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சம்பத்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளா கந்தன், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர். குமார், நகர துணை செயலாளர கோவிந்தன், நகர மன்ற உறுப்பினர் ஜஹீர் அஹமத், நகர பொருளாளர் தன்ராஜ்,. நவீன்குமார், சங்கர், தென்னரசு, அண்ணாதுரை, செந்தில், சரவணன், உதயகுமார், கோவிந்தராஜ், செந்தில்வேலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.