உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்!

74பார்த்தது
உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஆ. பூசாராணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி வரவேற்றார்.

கூட்டத்தில் ரூ. 33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்வது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி