நூதன முறையில் பணத்தை கொளி எடுத்த இருவர் கைது.

59பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வரக்கூடிய பொதுமக்களிடம் நூதன முறையில் ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து வந்த இருவர் சிக்கினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏடிஎம் (ATM) மையத்திற்கு வரக்கூடிய பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்து ஏமாற்றி வந்த நபர் குறித்து தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார் அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் பணத்தை எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து உள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற அவர் சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி