திருப்பத்தூர்: அரிசி வியாபாரியிடம் ரூ. 3 லட்சம் கொள்ளை
திருப்பத்தூர், வாணியம்பாடியை சேர்ந்தவர் அரிசி வியாபாரம் செய்து வரும் சுந்தர பாண்டியன். இவர் தனியார் வங்கியில் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.