திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த
ஆலங்காயத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் புளியமரம் வேரோடு சாய்ந்தது.
ஒரு மின் ட்ரான்ஸ்பர் உட்பட 7 மின்கம்பங்கள் சாய்ந்தன இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு மின் இணைப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக மின்இணைப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கையை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.