திருப்பத்தூர் மாவட்டம் வாணயம்பாடியில் அறிவரசன் என்பவர் நடத்தி வரும் தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக ஐ. சி. எம். ஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைதொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி மருத்துவமனையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை அகில இந்திய பல் மருத்துவர்கள் சங்கங்களின் செய்தியாளர்களை சந்தித்து
மருத்துவமனையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனை பூட்டப்பட்டிருந்தது.
அப்போது 1 அரை மாதங்களாக மூடப்பட்ட மருத்துவமனையில் சுவாப் டெஸ்ட் எடுத்து ஐ. சி எம். ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த குற்றச்சாட்டு உண்மை தன்மை அற்றது என்று கூறினர்.
இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சார்பில் தனியார் பல் மருத்துவமனை மருத்துவர் அறிவரசனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரம்யா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் வந்து அறிவரசனின்கி. சீனிவாசன் தனியார் பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டனர்