சிமெண்ட் குடோனில் 5. 5 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை

63பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பு குடேன் வைத்து வணிகம் செய்து வருபவர் தமிழ் தென்றல். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்த பின்னர் குடோனை மூடிவிட்டு சென்றார். நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் கடைக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது. மேலும் பணப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 5 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அங்கே பொருத்தப்பட்ட சிசி டிவி பதிவு காட்சிகள் பார்த்த போது அதில்
நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் குடோன் பின்பக்க வழியாக சுவர் ஏறி குதித்து அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கே பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 5. 5 லட்சம் பணத்தை திருடி சென்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

முன்னதாக மர்ம நபர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வில் பணம் திருடுவது சம்பந்தமான காட்சிகள் பதிவாகக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு சிசிடிவி கேமராவின் மீது துணியை போட்டு மறைத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி