360 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது.

74பார்த்தது
வாணியம்பாடி அருகே காரில் கடத்திவரப்பட்ட 360 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் விபத்தில் சேதம் அடைந்த கார் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றுள்ளார்.

இதில் இடத்தை ஏற்படுத்தி முன்னாள் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட பொழுது காரில் 24 மூட்டைகளில் 360 கிலோ தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு காரில் வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த நர்சாராம் என்பவரை கைது செய்து குட்கா பொருட்கள் எங்கிருந்து யாருக்காக கடத்திச் சொல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி