திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் நகராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டு பள்ளி தொடக்க விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கினார். மேலும் இதில் நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டுள்ளார்.