பள்ளியில் நீட் தேர்வில் தேர்ச்சி மாணவிகளுக்கு பாராட்டு

65பார்த்தது
பள்ளியில் நீட் தேர்வில் தேர்ச்சி மாணவிகளுக்கு பாராட்டு
விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த
செங்கிலி குப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேசப்
பள்ளியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சாதிக் பாஷா தலைமை வகித்தார். துணை முதல்வர் ஆனந்த் கால்சன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பொதுச் செயலாளர் பர்வேஸ் அஹமத் கலந்து கொண்டு
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் கே. ரீவா பாதிமா (526/720) மற்றும் A. நைலா பாத்திமா(491/720) ஆகியோரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி