காவலாளி இல்லாததால் சமூக விரோதிகள் அட்டகாசம்

52பார்த்தது
காவலாளி இல்லாததால் சமூக விரோதிகள் அட்டகாசம்
வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் காவலாளி இல்லாததால் சமூக விரோதிகள் அட்டகாசம்.

வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதாரம் மருத்துவமனை வளாகத்தில் வெளி ஆட்கள் இரண்டு சக்கர வாகனங்களை நாள்கணக்கில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பணியாளர்கள் மருத்துவமனைக்கு வரும் புறநயாளிகளின் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை இதனால் வாகனங்களை வழியிலேயே பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு காவலாளிகள் இல்லை இதனால் இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாகவும் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் வருகிறது. எனவே இரவு நேரத்தில் மட்டுமாவது காவலாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி